நகராட்சி ஓய்வூதியர் சங்&

06-06-2011
நகராட்சி ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

சிவகாசி, ஜூன் 5: தமிழ்நாடு நகராட்சி ஓய்வூதியர் சங்க சிவகாசி கிளைக் கூட்டம் அதன் தலைவர் சாம்வில்சன் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்றார். உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன், நவாப்ஜான் உள்ளிட்டோர் பேசினர்.

புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் பாராட்டு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குடும்பப் பாதுகாப்புத் தொகையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முகமதுமைதீன் நன்றி கூறினார்.

News & Events