Sivakasi y-s men club - Installation function |
25-06-2011 நிர்வாகிகள் பதவியேற்பு சிவகாசி, ஜூன் 21: சிவகாசி ஒய்ஸ்மேன் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.சங்கத் தலைவர் ம.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் அ.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். புதிய தலைவர் ஆர்.ஆனந்தராஜ், செயலாளர் அ.சென்றாயபெருமாள், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் ஆர்.எஸ்.வைரமுத்து, துணைச் செயலாளர் ஆர்.நாகேந்திரன் ஆகியோருக்கு, சங்கத்தின் மாவட்ட ஆளுநர் சி.ஆர்.ராஜலட்சுமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகளிர் பிரிவு தலைவர் அ.கலாவதி, செயலாளர் அ.வனிதா ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் (தேர்வு) சிவசுப்பிரமணியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். |