Sivakasi Lions Crackers City Club - Installation Programme 2011


29-06-2011
அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சிவகாசி, ஜூன் 28: சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். கண் தான மாவட்டத் தலைவர் ஜெ. கணேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் ஹரி அறிக்கை வாசித்தார்.

புதிய தலைவர் ஜி. ராமர், செயலாளர்கள் டி.ஞானசேகரன், கே.ராமதாஸ் , பொருளாளர் ஜோதிபாசு உள்ளிட்டோருக்கு, சங்க முன்னாள் தலைவர் ஏ. வைரபிரகாசம் பதவியேற்பு செய்து வைத்தார்.

சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் எல். பழனிச்சாமி, எஸ். சுரேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, தையல் இயந்திரம் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News & Events