SIVAKASI WEATHER
Rotary Club of Sivakasi Pyrocity - Installation Programme 2011

29-06-2011
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

சிவகாசி, ஜூன் 27: ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோசிட்டி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது (படம்).

சங்கத் தலைவர் முத்துகருப்பன் தலைமை வகித்தார். செயலாளர் அஸ்வின்குமார் சோனி அறிக்கை வாசித்தார்.

புதிய தலைவர் ஆர்.ராஜேஷ்கண்ணன், செயலாளர் தீபக்அமர்நாத், பொருளாளர் விரபத்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சங்க மாவட்ட ஆளுநர் (தேர்வு) ஷாஜகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பூலா ஊரணியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.30 ஆயிரம் சேவைத் திட்டமாக வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது.

இதில் துணை ஆளுநர் ஜி.வி.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News & Events
top