Blood donation awareness camp in Thiruthangal Kalaimagal Hr.Sec.School
07-07-2011 ரத்த தான விழிப்புணர்வு முகாம் சிவகாசி, ஜூலை 3: திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் பஞ்சுராஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மணிவேல் வரவேற்றார். சிவகாசி நண்பர்கள் ரத்த தானக் குழு நிர்வாகி ராமச்சந்திரன், ரத்த தானம் செய்வது குறித்து விளக்கிப் பேசினார். இதற்கான ஏற்பாட்டினை திட்ட அலுவலர்கள் முருகேசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். |