Eye donation awareness camp
01-02-2011 கண்தான விழிப்புணர்வு முகாம் சிவகாசி, ஜன. 31: விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், விருதுநகர் மகளிர் அரிமா சங்கம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து பெரியவன்னிகுளம் கிராமத்தில் கண்தான விழிப்புணர்வு முகாமை நடத்தின. நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவி செல்லமீனாட்சி தலைமை வகித்தார்.திட்ட அலுவலர் ஜி. அதிர்ஷ்டகுமாரி வரவேற்றார். கண்தான மாவட்டத் தலைவர் ஜெ.கணேஷ் கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில், பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ஆர்.ராஜேஷ், துணைத் தலைவர் ஜி. ராமர், முன்னாள் ஆளுநர் டி. தியாகராஜன், மகளிர் அரிமா சங்கச் செயலாளர் நாகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் வி.நவநீதமணி நன்றி கூறினார். |