Training for nurse - Sivakasi Mathi Hospitals


09-07-2011
செவிலியர்களுக்குப் பயிற்சி

சிவகாசி, ஜூலை 7: சிவகாசியில் மதி மருத்துவமனை, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகியன இணைந்து, செவிலியர்களுக்கு இலவசப் பயிற்சியை வழங்கின. செவிலியர்களின் திறமையை மேம்படுத்துவது எப்படி, அவர்கள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும், நோயாளிகளிடம் எவ்வாறு பழகவேண்டும், உள்நோயாளிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் மற்றும் மருந்துகளை எவ்வாறு கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி முகாமினை, டாக்டர் மகேந்திரசேகர் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டினை, மருத்துவமனை இயக்குநர் திலகபாமா செய்திருந்தார்.

News & Events