Electricity supply in Sivakasi
16-07-2011 சிவகாசியில் இன்று மின் குறை தீர்க்கும் முகாம் சிவகாசி, ஜூலை 15: சிவகாசியில் ஜூலை 16 ஆம் தேதி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அன்று காலை 11 மணியளவில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (விருதுநகர் மின் பகிர்மான வட்டம்) தலைமையில், சிவகாசி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. அச் சமயம் மின் நுகர்வோர் தங்களது குறைகளை நேரில் தெரிவித்து, தீர்வு காணலாம் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். |