Kamarajar Birthday Celebration in Sivakasi

16-07-2011
சிவகாசியில் காமராஜர் பிறந்தநாள் விழா

சிவகாசி, ஜூலை 15: சிவகாசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன் உள்ள காமராஜர் சிலைக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர்மன்ற துணைத் தலைவர் ஜி.அசோகன், ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

News & Events