PSR Engineering College for Women
04-02-2011 கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு சிவகாசி, பிப். 3: சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 178 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார். எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறைத் தலைவர் ராமசாமி வரவேற்றார். கொச்சி பூர்ணம் இன்போ விஷன் நிறுவன அதிகாரி ஜான் வர்கீஸ் மற்றும் பத்மநாபன் நேர்முகத் தேர்வுகளை நடத்தினர். நிகழ்ச்சியில் கணினி துறைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலர் சென்பகராஜன் நன்றி கூறினார். |