3000 ஓவியர்களை உருவாக்கிய சிவகாசி ஓவியர் சில்வெஸ்டர்

10-03-2018
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணினி வருவதற்கு முன்னர் சுமார் 200 ஓவியர்கள், காலண்டர் உள்ளிட்டவற்றுக்கு ஓவியம் வரைந்து கொடுத்து வந்தனர். தற்போது சிவகாசியில் வணிகரீதியாக செயல்பட்ட ஓவியர்களும் கணினிக்கு மாறிவிட்டார்கள். ஆனால் கையினால் வரையும் ஓவியத்தை இன்னும் விடாமல், பலருக்கு ஓவியப்பயிற்சியும் அளித்து வருகிறார் சிவகாசி ஓவியர் பி.சில்வெஸ்டர்.

1998 ஆம் ஆண்டு முதல் ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவரிடம் சுமார் 3000 பேர் ஓவியப் பயிற்சி பெற்றுள்ளனர். இவரிடம் 6மாதம் முதல் 9ஆண்டுகள் வரை பயிற்சி பெற்றவர்களும் உண்டு. பென்சில் ஓவியம் குறித்து புத்தகமும் எழுதியுள்ளார்.

வாழ்த்துக்கள் ஐயா!

- www.sivakasiweekly.com


News & Events