Feb.9 2011 Employment opportunity camp for physically challenged
07-02-2011 பிப்.9-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சிவகாசி, பிப். 5: மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, சென்னை மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம், விருதுநகர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு வள மையம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து சிவகாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி முகாமை பிப்ரவரி 9-ம் தேதி நடத்த உள்ளன. மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் என முகாமை நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் விவரங்கள் பெற 98430 88828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். |