சிவகாசி கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கம்


07-07-2018
சிவகாசி கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்கம்

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்றம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் கு.வளர்மதி வரவேற்றார்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் செ.கிளிராஜ், இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ் இலக்கியங்களை மாணவிகள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள இயலும்.
இலக்கியங்களை படித்தால் மட்டும் போதாது.அதில் உள்ள நயங்களை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கற்பனை சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள்ஒரு படைப்பாளியாக உருவாக இயலும் என்றார். மாணவி செ.செங்கம்மாள் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் பா.பொன்னி செய்திருந்தார்.


News & Events