SHNV School 125th Anniversary


19-07-2018
இன்று சமூகத்தின் விருட்சகங்களாக திகழும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், இஞ்சினியர்கள், வக்கீல்கள் இத்தியாதி என எத்தனையோ பேருக்கு இந்த வாசலின் பின் தான் விதை விதைக்கப்பட்டது... எத்தனையோ கனவுகளுக்கும், லட்சியங்களுக்கும், எதிர்பார்ப்புகளும் உரம் இந்த வாசலின் பின் தான் இடப்பட்டது... லட்சக்கணக்கானோரின் அறிவிற்கும், அன்பிற்கும், பண்பிற்கும், ஒழுக்கத்திற்கும், நட்பிற்கும், காதலுக்கும் வேர் இந்த வாசலின் பின் தான் ஆரம்பிக்கப்பட்டது... எங்கு முளைத்தாலும் நடப்பட்ட இடமும், கிடைக்கின்ற சூரிய ஒளியும், தண்ணீரும் சரியாக அமைந்தால் நாத்து நெற்கதிர்களை தரும்... அது போல இங்கு நடப்பட்ட எத்தகைய மாணவனையும் முழு மனிதனாக திருப்பித்தருவதே இப்பள்ளியின் சிறப்பு... 125ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்பள்ளிக்கும், வழிநடத்திய, வழிநடத்திச் செல்லும் சான்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இப்பள்ளியின் 'நூற்றாண்டு மாணவன்' என்ற பெருமையுடன் வணக்கங்கள்!


News & Events