ரஜினியுடன் நடித்த சிவகாசி திருநங்கை ஜீவா

25-06-2019
ரஜினியுடன் நடித்த சிவகாசி திருநங்கை ஜீவா

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் "தர்பார்" படத்தில் சிவகாசி திருநங்கை ஜீவா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்து வெளிவந்த "தர்மதுரை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சிவகாசி திருநங்கை ஜீவா.

அவர் தர்பார் படத்தில் நடித்துள்ளதை இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். “தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகையாக அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து விருதுகள் பெற்று, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் சகோதரி திருநங்கை ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு திருநங்கை ஜீவா, “நன்றி சார், எல்லாம் நீங்கள் தந்த வாழ்க்கை சார்” என பதிலளித்துள்ளார். ஜீவாவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்கள்.

வாழ்த்துக்கள் சிவகாசி ஜீவா!


News & Events