பசுமை பட்டாசு தயார் செய்வதற்கான ஆராய்ச்சி ஆய்வகம்

24-08-2019
பசுமை பட்டாசு தயார் செய்வதற்கான ஆராய்ச்சி ஆய்வகம்

பசுமை பட்டாசை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, கடந்த ஓராண்டாகவே பசுமை பட்டாசு தயாரிப்பு தொடர்பான ஆய்வுகளில் பட்டாசு தயாரிப்பாளர்கள், மத்திய அரசு, விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக சிவகாசியில் பசுமை பட்டாசு குறித்த ஆய்வு, பயிற்சி மற்றும் சான்றிதழுக்கான ஆய்வகம் தொடங்கப்பட்டு உள்ளது. பசுமை பட்டாசு தொடர்பான ஆய்வு ஆராய்ச்சிக்கு இதுவரை நாக்பூருக்கு மட்டுமே சென்று வந்த நிலையில் இனி சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரிலேயே இந்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்பது மிகப் பெரிய ஆறுதல். இந்த ஆய்வகத்தின் மூலம் 1070 பட்டாசு ஆலைகள் பயன்பெறுகின்றன.

பசுமை பட்டாசுகள் தொடர்பான புதிய கோட்பாடுகளின்படி பேரியம் நைட்ரைடை அடிப்படையாக கொண்ட பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியும். இதனால் பட்டாசுகளில் மாசு உமிழ்வினை 50 சதவீதம் குறைக்க முடியும். இந்த புதிய உற்பத்தி முறையை பட்டாசு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு சீசன் களைகட்டியுள்ள நிலையில் இந்த ஆண்டு பசுமை பட்டாசு தயாரிப்பிற்காக நாக்பூர் ஆய்வகத்தில் விண்ணபித்து 310 பட்டாசு ஆலைகள் ஏற்கனவே அனுமதி பெற்று விட்டன. அவர்களுக்கான சான்றிதழும் விழாவில் வழங்கப்பட்டன.


News & Events