சிவகாசியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

18-03-2020
சிவகாசியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில், இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகாசியில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். விழிப்புணர்வு முகாம்களில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர். மேலும் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


News & Events