SIVAKASI WEATHER
News & Events
சிவகாசியில் தயாராகுது என் 95 மாஸ்க்

16-07-2020
சிவகாசியில் தயாராகுது என் 95 மாஸ்க்

கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதை தடுக்க சமூக இடைவெளி மிக அவசியமாகிறது. அதே நேரத்தில் மாஸ்க் அணிதல் மிக மிக முக்கியமாகிறது. மாஸ்க் அணிகிறோம் என்ற பெயரில் பலரும் துணி, கர்சீப், தரமில்லாதவைகளை பயன்படுத்தி கடமைக்கு அணிகின்றனர்.

மாஸ்க் என்பது தரமானதாக, கிருமிகள் உள் புகாதவாறு, எளிதில் சுவாசிக்கும் வகையில் இருக்க வேண்டும். இதன் அனைத்திற்கு மாஸ்க் என் 95 உறு துணை புரிகிறது. இது 95 சதவீத கிருமிகளை தடுக்கிறது. இதைதான் சுகாதார துறையும் வலியுறுத்துகிறது. அந்த வகை மாஸ்க் செங்கமலநாச்சியார்புரம் பாலாஜி சொந்தமான டி.சி.டி., லினென் கார்மென்ட்ஸ் கம்பெனியில் தயாரிக்கின்றனர்.

5 லேயர்கள் உடைய இதை அரசு நிர்ணயித்த தரத்தில் தயாரிக்கின்றனர். விரும்புபவர்கள் நிறுவனங்களின் எம்பளம், பெயர் பிரின்ட் செய்தும் தரப்படுகிறது. இந்த வகை மாஸ்க் ரூ. 200 வரை விற்பனை செய்யும் நிலையில் இங்கு ரூ. 100 க்கு விற்பனையாகிறது. இதோடு இங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர், நர்ஸ், பணியாளர்கள் அணியும் முழு கவச உடையும் முழு பாதுகாப்புடன் தயாரிக்கப்படுகிறது.

உரிமையாளர் பாலாஜி: மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்ந்து நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகத்தை சேர்ந்தவர்கள் மொத்தமாக ஆர்டர் செய்து வாங்கி செல்கின்றனர்,என்றார் தொடர்புக்கு 98946 23761.


News & Events
top