SIVAKASI WEATHER
கொரோனாவால் குறைந்துபோன பட்டாசு விற்பனை

27-10-2020
கொரோனாவால் குறைந்துபோன பட்டாசு விற்பனை

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் பட்டாசு உற்பத்தி மையமான சிவகாசியில் 3,000-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. கொரோனா முடக்கம் காரணமாக பட்டாசு உற்பத்தி இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே விற்பனை துவங்கியதையும் வியாபாரிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டை பொறுத்தவரை சிறுவர்களுக்காக , ஜீபூம்பா, பாப் ஸ்டார், பின்ஜோர் கிரீன் போன்ற ரகங்களும் வானில் வர்ண ஜாலங்களைக் காட்டும் லவ்டோஸ், பிங் பாங், கிராக்லிங் கூல், செவன்அப், சில்வர் கூல் போன்ற புதிய பேன்ஸி ரக பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

வாடிக்கையாளர்களின் சுமை கருதி இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை உயர்த்தப்படவில்லை என்ற போதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை 50 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும் இனி வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என காத்திருப்பதாகவும் விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

- Tamil News18


News & Events
top