சிவகாசி ஹாக்கி கிளப் கூட்டம் நடைபெற்றது

30-11-2020
சிவகாசி ஹாக்கி கிளப் கூட்டம் நடைபெற்றது

டவுன் ஹாக்கி கிளப் 2019-20 ம் ஆண்டிற்கான வருடாந்திர கூட்டம் அரசன் ஜூனியர் மாடல் பள்ளியில் நடந்தது. டவுன் ஹாக்கி கிளப் தலைவர் அசோகன் வரவேற்றார். கூடுதல் உப தலைவராக காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டார். செயலாளர் இன்பாசாகரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் நினைவாக பல்வேறு கிளப்புகளுக்கு இடையே ஹாக்கி போட்டிகள் நடத்தவும், அடுத்த ஆண்டில் ஏ.எம்.எஸ்.ஜி., விஜயகுமார் நினைவாக மாநில அளவிலான ஷாக்கி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. டவுன் ஹாக்கி கிளப் செயலாளர் இன்பாசாகரன் நன்றி கூறினார்.

News & Events