SIVAKASI WEATHER
தேர்தலில் வெற்றி பெற்றால் - கமல்

15-12-2020
தேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன்: பட்டாசாக வெடித்த கமல்

தேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் கமல்ஹாசன் கடந்த 13 ஆம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது நேற்று மதுரையில் பேசிய அவர் தான் தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.

ஆனால் எந்தத் தொகுதி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இந்த நிலையில் அவர் மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகருக்கு இன்று காலை 9 மணிக்கு வந்தார். அப்போது அவர் சிவகாசி- திருத்தங்கல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசுத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கமல்ஹாசன் கூறுகையில் எம்ஜிஆர் எங்கள் சொத்து: அவர் மடியில் அமர்ந்தவன் நான்.

மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டுவார்கள். நாங்கள் யார் என கேட்டவர்கள் இன்று எங்களின் வெற்றி குறித்து கணக்கெடுக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன் என்றார்.


News & Events
top