SIVAKASI WEATHER
சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு

28-08-2021
சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு

* சிவகாசி 1920ல் நகராட்சியாக உருவாக்கப்பட்டது.

* 1978 ஆகஸ்டில் இரண்டாம் நிலை நகராட்சியானது.

* 1978 செப்டம்பரில் முதல்நிலை நகராட்சியானது.

* 1998ல் தேர்வுநிலை நகராட்சியானது.

* 2013ல் சிறப்புநிலை நகராட்சியானது.

* 2017ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அ.தி.மு.க., அரசு அறிவித்தது.

* 2021, ஜன. 8ல் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டது.

1920 துவங்கி 2021 வரை நுாறாண்டுகளை கடந்து நகராட்சியாக சிவகாசி இருந்தது.நேற்று மாநகராட்சியாக சிவகாசி தரம் உயர்த்தப்பட்டது.திருத்தங்கல் 1966 வரை ஊராட்சி, 2004 பேரூராட்சி, 2010ல் மூன்றாம் நிலை நகராட்சியாக மாறி தற்போது தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது. இவ்விரண்டு, மற்றும் சில கிராம ஊராட்சிகள் சேர்ந்து மாநகராட்சியாகின்றன.

- தினமலர்


News & Events
top