SIVAKASI WEATHER
சிவகாசியில் மழை

28-10-2021
சிவகாசியில் மழை

சிவகாசி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழை பெய்யாத நிலையே இருந்துவந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வெயில் இல்லாத நிலையிலும், கடுமையான இறுக்கம் இருந்து வந்தது. மாலையில் லேசான சாரல்மழை பெய்து நின்றது. இன்றும் மழை ஏமாற்றிவிட்டது என்று நினைத்தபோது, திடீரென்று பலத்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 21ம் தேதி அரை மணி நேர மழைக்குப்பின் சிவகாசியில் நேற்று பெய்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. எனினும் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு மழை சற்று இன்னல்களாகவே இருந்தது கசப்பான உண்மை. சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், செங்கமலப்பட்டி, வெள்ளையாபுரம், சித்துராஜபுரம், ரிசர்வ்லைன், விஸ்வநத்தம், மீனம்பட்டி, பாறைப்பட்டி, அனுப்பங்குளம் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.


News & Events
top