தடுப்பூசி போடும் முகாம் |
08-01-2022 தடுப்பூசி போடும் முகாம் சிவகாசி எஸ்.எப். ஆா்.மகளிா் கல்லூரியில் 15 வயது முதல் 18 வயது உடைய மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தொடங்கி வைத்தாா். சிவகாசி வட்டத்தில் பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 1,612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் சிவகாசி வட்டார மருத்துவா் வைரக்குமாா், வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் இந்திராணி, உதவி ஆய்வாளா் நக்கீரன் உள்ளிட்டோா் வத்திராயிருப்பு வட்டம் மேலகோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இந்த பள்ளியில் 280 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. |