SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசும் உக்ரைன் ரஷ்யா போரும்

04-05-2022
சிவகாசி பட்டாசும் உக்ரைன் ரஷ்யா போரும்

சிவகாசியிலிருந்து திரு. கார்த்திகேயன் கிருஷ்ணன் எழுதுகிறார்;

ரஷ்யாவும், யுக்ரேனும் வெடிக்காததே இல்லை.

அத்தனை வித ராக்கெட், பாம், ஜெட், ஏவுகணை, டாங்கிகள், துப்பாக்கிகள்னு, அனுகுண்டை தவிர எல்லாம்தையும் யூஸ் பண்ணிட்டானுங்க.

இதனால வளிமண்டலத்துக்கு ஒன்னும் ஆகல. அண்டார்டிகாவுல ஐஸ் மெல்ட் ஆகல. ஓசோன்ல ஓட்ட உழுவல.

ஏன்னா அவனுங்க வெடிக்கறதெல்லாம் சும்மா காத்தடைச்ச பலூன்.

ஆனா பாருங்க, சுண்டக்கா சைஸ் சிவகாசில தயாரிக்கற பொட்டுபட்டாசுக்கும், மத்தாப்புக்கும், புஸ்வாணத்துக்கும், லட்சுமி வெடிக்கும் , அவனுங்களுது எல்லாம் கால் தூசிப் பெறாது.

ஏன்னா நாம தீபாவளிக்கு ஒரு நாள் வெடிக்கறதுலயே புவி வெப்பமடையும். இந்தியா சூடாயிடும், உலகமே அழிஞ்சுடும். அவ்ளோ பவர்புல்.

நவீன விஞ்ஞானிகளான - பட்டாசுக்கு தடை கேக்கறவனுங்களுக்கும், காலைல / சாயந்திரம் ஒரு மணி நேரம் மட்டும் வெடிக்கணும்கற புது சட்டத்திற்கும் சமர்ப்பணம்.


News & Events
top