SIVAKASI WEATHER
ஹாக்கியில் சாதித்த சிவகாசி பள்ளி மாணவி

27-08-2022
ஹாக்கியில் சாதித்த சிவகாசி பள்ளி மாணவி

சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் விளையாட்டு அமைப்புகள் சார்பில் சிவகாசியில் நேற்று காலை போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மேயர் சங்கீதா இன்பம் தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவி ஜியாஸ்ரீ 5 கிலோ மீட்டர் தூரம் ஹாக்கி விளையாடியபடி சென்றார். இதனை நோபல் அமைப்பினர் உலக சாதனையாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர். இந்த சான்றிதழை மாணவிக்கு, மேயர் சங்கீதா இன்பம் வழங்கினார்.


News & Events
top