கிராம சபை கூட்டம் |
04-10-2022 கிராம சபை கூட்டம் கிராம சபை கூட்டம் காந்தி பிறந்தநாளையொட்டி நேற்று சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 கிராமங்களில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி ஆனையூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர். இ்ந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், டாக்டர் வைரக்குமார், பொறுப்பு தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் நாகராஜன் செய்திருந்தார். தேவர்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு பஞ்சாயத்து தலைவர் முத்து வள்ளி மச்சக்காளை தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் ராஜேஸ்வரி, சமூக தணிக்கையாளர் ரமேஷ், தலைமையாசிரியர் தேவராஜ், யூனியன் அதிகாரி ஜானகி ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் கருப்பசாமி செய்திருந்தார். |