SIVAKASI WEATHER
குட்டி ஜப்பானும் குட்டி தீபாவளியும்

21-12-2022
குட்டி ஜப்பானும் குட்டி தீபாவளியும்

சிவகாசியிலிருந்து ஜெப ராகு எழுதுகிறார்;

கார்த்திகை திருநாளில் தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் பல பொரியல் வகைகள் செய்து தீபவிளக்கேற்றி வழிபடுவர். சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் தீபாவளி தினத்தன்று தங்களது குடும்பத்துடன் கொண்டாட முடியாத காரணத்தால், தீப திருநாளான கார்த்திகை திருவிழாவை குட்டி தீபாவளியாக பட்டாசு வெடித்து கொண்டாடுவர். பெரும்பாலான சிவகாசி வீடுகளில் தீபாவளி பண்டிகையில் மீதமிருக்கும் பட்டாசுகளை கார்த்திகை திருநாளில் வெடித்து கொண்டாடி மகிழ்வர். அது மட்டுமின்றி சிவகாசி வீடுகளில் கார்த்திகை ஸ்பெஷல் பொரிகடலை உருண்டை, கடலை உருண்டைகள் செய்து அக்கம் பக்கத்தினரிடம் பரிமாறி உண்டு மகிழ்வர்.


News & Events
top