சிறப்பான புது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துகள் கதிரவன் டாக்டர் |
10-03-2024 சிறப்பான புது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துகள் கதிரவன் டாக்டர் சார் சிவகாசியிலிருந்து திரு.ப ராகு எழுதுகிறார்; வழக்கம் போல் இன்று வாட்சப் ஸ்டேட்டஸ் பார்க்கையில், எப்போதாவது ஸ்டேட்டஸ் பதிவு செய்யும் நம் கதிரவன் டாக்டர் அவர்களின் ஸ்டேட்டஸ் தென்பட்டது. அவரது பதிவில் தன் வாழ்க்கை பயணத்தை சுருக்கமாக சிவகாசி மக்களுக்காக தெரிவித்திருந்தார். அவரது பதிவின் குறிப்பு இதோ உங்களுக்காக "சிவகாசி மக்களுக்கு எனது பணிவான வணக்கம். புதுச்சேரி மாநில காரைக்கால் ஊரில் பிறந்து மூன்று வயது இருக்கும் போது தந்தையின் ஆசிரியப் பணி நிமித்தமாக சிவகாசி வந்தோம். AJ கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பல மாணவர்களை உருவாக்கிய தன் தந்தையின் வழிகாட்டுதலில் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய மருத்துவப் படிப்பை கற்று 1992ம் ஆண்டு முதல் குழந்தைகள் நல மருத்துவப் பணியை துவங்கியதாக குறிப்பிட்டுள்ளார். சமூகப் பணியை பல மக்களுக்கு சென்றடைய நினைத்து சிவகாசி முனிசிபாலிட்டி சேர்மனாக வெற்றி பெற்று. தற்போது சுயேட்சை வேட்பாளராக மக்களின் நல்லாதரவால் வெற்றி பெற்று சேவை செய்து வருகிறேன். எனது வாழ்க்கையை குழந்தை நல மருத்துவராக, சேர்மனாக, கவுன்சிலராக அர்ப்பணித்தேன். அதிகம் எனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடவில்லை. தற்போது 64 வயதாகும் நான், எனது தந்தையை 2020ம் ஆண்டு இழந்தேன்/ என் தாயாரின் உடல்நிலையும் சற்று சரியில்லாமல் உள்ளது. எனது மகன்கள், மருமகள்கள் அனைவரும் வேலை செய்து வருவதால் அனைவரையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கும் என் மனைவிக்கும் உள்ளது. மேலும் எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை, காலில் தசை நார் கிழிந்து சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் சென்னையில் குடியேற உள்ளோம். எனது பேஷண்ட்களிடமும் எனது முடிவை தெரிவித்து விட்டேன். அவர்களிடம் எனது தொடர்பு எண்ணை தந்துள்ளேன். சிவகாசி குழந்தை நல டாக்டர்கள் எனது பேஷண்ட்களை நன்கு கவனித்துக்கொள்வார்கள். சேவை செய்வதிலேயே எனது வாழ்க்கையை அர்ப்பணித்த என்னால் என் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவில்லை, குறிப்பாக என் செல்ல பேரக் குழந்தைகளுக்காக. உங்கள் அனைவரிடமும் தொடர்பில் இருப்பேன். உங்கள் அனைவரையும் மிஸ் செய்கிறேன்/ மன்னிக்கவும் நம்ம ஊர் மக்களே. அனைவரும் சந்தோசமாக, ஆரோக்கியமாக வாழ விரும்புகிறேன். எனது தொடர்பு எண் 9842565552. அன்புள்ள டாக்டர் கதிரவன்என்று பதிவிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து, நூறு ஆண்டு பழமையான சிவகாசி நகராட்சியின் கடைசி சேர்மனாக, சிவகாசி மாநராட்சியின் சுயேட்சை கவுன்சிலராக சிவகாசி மக்களுக்கு சேவை செய்து, தற்போது குடும்பத்தாருடன் சிறப்பான புது இன்னிங்ஸ் துவங்க இருக்கும் சிவகாசி கதிரவன் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துகள்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்! |