சிவகாசியில் மண்டல பூஜை |
29-12-2024 சிவகாசியில் மண்டல பூஜை சிவகாசி நடராஐ காலனி ஶ்ரீ செந்தில் விநாயகர் திருக்கோவிலில் வீச்சருவாள்காரன் ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மண்டலபூஜை மற்றும் அன்னதான விழா டிசம்பர் 25, 20024, புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அய்யனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 10 மணியளவில் மண்டல பூஜை துவங்கியது. சிறப்பு தீபாராதனை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |