| சர்வதேச நடுவராக முத்திரை படைத்த சிவகாசி ரத்தினம் அனந்தராம் |
25-07-2026 உலக செஸ் அரங்கில் சர்வதேச நடுவராக முத்திரை படைத்த சிவகாசி ரத்தினம் அனந்தராம் சிவகாசி செஸ் கிளப்பின் செயலாளரும், இந்தியாவின் முன்னணி சர்வதேச செஸ் நடுவர்களில் ஒருவருமான சர்வதேச நடுவர் (International Arbiter) ரத்தினம் அனந்தராம் அவர்கள், உலக செஸ் அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவரும் முக்கிய ஆளுமையாக திகழ்கிறார். ஓய்வு பெற்ற வேதியியல் பேராசிரியரான அவர், இந்தியாவின் முதல் 'A' கிரேடு செஸ் நடுவர் என்ற பெருமையை பெற்றவர். மேலும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் (AICF) நடுவர்கள் கவுன்சில் தலைவர் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) நடுவர்கள் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். அவரது சிறப்பான சாதனைகளில், 6 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தலைமை நடுவராக பணியாற்றியுள்ளார். 19 ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார். 15 தொடர்ச்சியான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். உலக மற்றும் இந்திய அளவில் சுமார் 380 சர்வதேச மற்றும் தேசிய செஸ் போட்டிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார். FIDE அங்கீகரித்த விரிவுரையாளராக, செஸ் நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் புத்துணர்வு கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகளின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளராகவும் முக்கிய பங்காற்றி வருகிறார். சிவகாசியை உலக செஸ் வரைபடத்தில் பெருமையுடன் உயர்த்தி நிறுத்திய ரத்தினம் அனந்தராம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |