| 50-வது திருமண நாள் விழா |
07-09-2026 50-வது திருமண நாள் விழா தர்மராஜா – பசுங்கிளி தம்பதிக்கு பாராட்டு சிவகாசி: சிவகாசியைச் சேர்ந்த திரு. தர்மராஜா, திருமதி. பசுங்கிளி தம்பதியினர் தங்களது 50-வது திருமண நாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அரை நூற்றாண்டு காலம் அன்புடனும், ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்ந்து வரும் இத்தம்பதியினருக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 50 ஆண்டுகள் இல்லற வாழ்வில் இணைந்து பயணித்த இத்தம்பதியினருக்கு வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்! இத்தம்பதியினர் பல்லாண்டு காலம் உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அனைவரும் வாழ்த்தினர். |