சிவகாசியில் தினமும் மாறும் வானிலை: காலையில் வெயில், மாலையில் மேகமூட்டம்!


19-09-2026
சிவகாசியில் தினமும் மாறும் வானிலை: காலையில் வெயில், மாலையில் மேகமூட்டம்!

சிவகாசி: சிவகாசியில் கடந்த சில நாட்களாக வானிலை தொடர்ந்து வித்தியாசமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் சுள்ளென அடித்து வெப்பம் அதிகமாக காணப்படும் நிலையில், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வானம் மேகமூட்டமாகி, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மேகங்கள் திரண்டு, பலத்த இடி சத்தம் கேட்கும் நிலையில், அதற்கேற்ற அளவில் மழை பெய்யாமல் ஆங்காங்கே லேசான தூறல் மட்டுமே காணப்படுகிறது.

இன்றும் சிவகாசியில் காலை நேரத்தில் வெப்பமான வானிலை நிலவிய நிலையில், பிற்பகலில் மேகமூட்டம் அதிகரித்து மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு மாலை 7 மணி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

“இடி மட்டும் நூறு… மழையோ இரண்டு நிமிஷம் தூறல்!” என்ற நிலையே சிவகாசியின் தற்போதைய வானிலையைப் பிரதிபலிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



News & Events