குடியரசு தின விளையாட்டு |
22-01-2011 சிவகாசி, ஜன. 21: கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலாள குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகளில் சிவகாசி காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். கேரம் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் இப்பள்ளியின் சீனியர் மாணவிகள் நந்தினிதேவி, சுகந்தி ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர். மாணவர் ஒற்றையர் பிரிவில் நரேந்திரவிகேனஷ் இரண்டாமிடம் பெற்றுள்ளார். டென்னிஸ் சீனியர் மாணவிகள் ஒற்றையர் பிரிவில் கீர்த்திகா நான்காமிடம் பெற்றுள்ளார். இந்த மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் கதிரேசன், தாளாளர் அண்ணாமலையான், உடற்கல்வி இயக்குநர் கணேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். |