Sri Kaliswari College - Seminar 2011 |
11-02-2011 காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மையியல் துறை சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி, உலகளாவிய மேலாண்மை சவால்கள் மற்றும் வெற்றிபெறும் உத்திகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளதாக துறை இயக்குநர் கே.நடராஜன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் தெரிவித்தது: இந்தக் கருத்தரங்கில் 12 கல்லூரிகளைச் சேர்ந்த மேலாண்மையியல் துறை மாணவர்கள் சுமார் 200 பேர் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொள்கிறார்கள். உலகளாவிய போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் வியாபாரத் துறைகளில் புதுமைகள் தினமும் புகுத்தப்படுதல் வேண்டும். இதற்குத் திறமையான நிர்வாகிகள், அதிநவீன கண்டுபிடிப்புக்கள், மற்றும் ஆராய்ச்சி அவசியம். இயற்கை வளங்களைக் கொண்டு படைக்கும் பொருள்கள் மூலமாக, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்களுக்கு அவ |