SIVAKASI WEATHER
Workshop 2011 - Sri Kaliswari College

11-02-2011
கல்லூரியில் பயிற்சி பட்டறை

சிவகாசி, பிப். 9: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகியவை இணைந்து, மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்தார்.

முதல்வர் கண்மணி வரவேற்றார். துறை இயக்குநர் நாராயணப் பிரகாஷ் அறிமுக உரையாற்றினார்.

காமராஜர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அருண்குமார் ஜீனோகிராபிக் மற்றும் மானுடர்கள் இடம் பெயர்தல் என்ற தலைப்பிலும், அ.சியாமளா, ஜீனோமிக் டெக்னாலஜி ஆப் ஜீனோகிராபிக் என்ற தலைப்பிலும், பேராசிரியர் ஜி.மாரிமுத்து வெளவால்களின் குணாதிசயங்கள் என்ற தலைப்பிலும் பேசினர்.

முனைவர்கள் ஞா. மாரிமுத்து, டி.ஜெ. பாண்டியன், துணை முதல்வர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

துறைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

News & Events
top