Arasan Ganesan Polytechnic College - Sports day 2011


11-02-2011
பாலிடெக்னிக்கில் விளையாட்டு விழா

சிவகாசி, பிப். 10: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் விளையாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரிப் பொருளாளர் ஜி.வி. கார்த்திக் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார்.

சிவகாசி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கே.எஸ். முருகேசன் தேசியக் கொடியை ஏற்றினார். முதல்வர் டி. பாலசுப்பிரமணியன் கல்லூரிக் கொடியை ஏற்றினார்.

ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. முருகேசன் பரிசு வழங்கினார்.

முன்னதாக, உடற்கல்வி இயக்குநர் மதனகோபால் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் எம். நந்தகுமார் நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாட்டை விளையாட்டுத் துறைத் தலைவர் எஸ்.வி. இளங்கோவன் மற்றும் எஸ். அருஞ்சுனை வளவன் ஆகியோர் செய்திருந்தனர்.

News & Events