ஹீமோகுளோபின் விழிப்புண&#

22-01-2011
சிவகாசி, ஜன. 21: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி நுண்ணுயிரியல் மற்றும் மரபியல் துறை சார்பில் ஹீமோகுளோபின் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதையொட்டி ரத்தத்தில் எந்தெந்த வயதில் எந்த அளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும், இதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய உணவு முறைகள் ஆகியவை குறித்து துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன.

மேலும் காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு ரத்தத்தில் எந்த அளவில் ஹீமோகுளோபின் உள்ளது என சோதனை செய்து தேவைப்பட்டவர்களுக்கு உணவு முறைகள் குறித்து அறிவுரை வழங்கினர்.

இதற்கான ஏற்பாட்டினை முனைவர் திருமலை அரசு, ராதா ஆகியோர் செய்திருந்தனர்.

News & Events