Blood Donation Camp 2011 - Sri Kaliswari College NSS


14-02-2011
கல்லூரியில் ரத்த தான முகாம்

சிவகாசி, பிப். 13: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்ட மகளிர் பிரிவு ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் ஷர்மிலா திலகவதி முகாமைத் தொடக்கி வைத்தார். இதில் 66 மாணவர்கள், 15 மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.

இதற்கான ஏற்பாட்டினை மா.அன்பழகன், ஆரோக்கியஜான்பால், தேவிகாமாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

News & Events