Silent Olympic Games - Sivakasi CSI students won 12 medals


14-02-2011
சைலண்ட் ஒலிம்பிக் போட்டி: சிவகாசி பள்ளி மாணவர்களுக்கு 12 பதக்கம்

சிவகாசி, பிப். 12: மும்பையில் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற்ற சைலன்ட் ஒலிம்பிக் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் மற்றும் வாய்பேச இயலாத பள்ளி மாணவ, மாணவிகள் 12 பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இப் போட்டியில், இப் பள்ளி மாணவ, மாணவிகள் 24 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியை மும்பை ரவுண்ட்டேபிள் கிளப் நடத்தியது.

இதில் இந்தப் பள்ளி மாணவர்கள் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் 9 வெண்கலப் பதக்கங்களும், 3 வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இந்த மாணவர்களை பள்ளித் தாளாளர் ஜி. எட்வின் கனகராஜ், தலைமை ஆசிரியர் கே. பால்ராஜ், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜெஸிந்தாள், அலெக்ஸ் சுந்தர் சிங் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

News & Events