Free Eye camp 2011 - Sivakasi Central Rotary Club


15-02-2011
வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை

சிவகாசி, பிப். 13: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை, அனில்குமார் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தின. நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கே.சுரேஷ்தர்ஹர் தலைமை வகித்தார். சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை பொதுமேலாளர் ஜோயல் முன்னிலை வகித்தார்.

வாகன ஓட்டுநர்கள் 30 பேருக்கு மருத்துவர் அனில்குமார் கண் கண்ணாடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உதவி ஆளுநர் பாஸ்கர்ராஜ், நிர்வாகிகள் வேம்பார், டி.கதிரேசன், மோகன், அண்ணாமலையான், சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஞானம், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events