Sri Kaliswari College - Seminar 2011


17-02-2011
காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி, பிப். 15: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணிதவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ். கண்மணி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஏ.சுப்பிரமணியன் வரவேற்றார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் டி. ஜெயமணி சிறப்புரையாற்றும்போது அறிவியல் பாடங்களுக்கும் கணிதம் அடிப்படையாக உள்ளது எனவும், கணிதம் குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கப்படுகிறது எனவும் கூறினார். துறைத் தலைவர் பிச்சைக்கனி நன்றி கூறினார்.

News & Events