echo $iheader1; ?>
echo $inavigator1; ?> echo $slider1; ?>Ayya Nadar Janaki Amaal College |
24-01-2011 சிவகாசி, ஜன. 23: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மகளிர் மன்றம் சார்பில் பழமைவாதமும், பெண்களுக்கான அதிகாரமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ந.அருள்மொழி வரவேற்றார். சமவாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் க.கருப்பசாமி, கணினித் துறைத் தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெண்களும் சட்டமும், ராணுவத்தில் பெண்கள், பெண் சிசுக் கொலை, தொழில் துறையில் பெண்கள், பெண்களும் சமூகமும் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. சிவகாசி வட்டார மருத்துவ அலுவலர் செல்வசுதா சிறப்புரையாற்றினார். கல்லூரித் தலைவர் ராமமூர்த்தி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் காருண்யா நன்றி கூறினார். |