Hike in Petrol price

24-01-2011
சிவகாசி, ஜன. 22: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும், திருவாரூரில் கட்சியின் நிர்வாகி நாவலன் கொலையைக் கண்டித்தும், வெம்பக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் சிவகாசி வட்டம் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சேர்வை தொடக்கவுரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி உள்ளிட்டோர் பேசினர்.

News & Events