Eye donation awareness programme 2011 - Sri Vidya College of Education |
07-03-2011 கண் தான விழிப்புணர்வு சிவகாசி, மார்ச் 4: சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில், விருதுநகர் ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குக் கல்லூரித் தலைவர் திருவேங்கடராமானுஜதாஸ் தலைமை வகித்தார். முதல்வர் ராஜா வரவேற்றார். கண் தான மாவட்டத் தலைவர் ஜெ.கணேஷ், கண் தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்துப் பேசினார். கண் தானம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. கண் தானம் குறித்த கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. |