Y-s men Club Sivakasi - 2011


08-03-2011
நலத்திட்ட உதவி வழங்கல்

சிவகாசி, மார்ச் 7: சிவகாசி ஒய்ஸ்மேன் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு சங்கத் தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலி, ஏழைப் பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம், மாணவர்களுக்கு கணினி பயிற்சி பெற கட்டணம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மண்டலத் தலைவர் ஜேக்கப் வர்கீஸ் சிறப்புரையாற்றினார்.

மண்டலச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆளுநர் சி.ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

News & Events