ஜன.29 மாற்றுத் திறனாளிகளுĨ |
24-01-2011 ஜன.29 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை உறுப்புகள் வழங்க முன்பதிவு சிவகாசி, ஜன. 23: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கைக் கால் மற்றும் கை வழங்க சிவகாசியில் ஜனவரி 29, 30 தேதிகளில் முன்பதிவு நடைபெறும் என அகில பாரத மார்வாடி யுவ மஞ்சு அமைப்பின் சிவகாசி செயலாளர் ரிஷிசங்கவி கூறினார். இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது: எங்கள் அமைப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கைக் கால், கை ஆகியவற்றை கடந்த இரு ஆண்டுகளாக சிவகாசியில் மாவட்ட அளவில் வழங்கி வருகிறோம். தற்போது தென்மாட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கைக் கால் மற்றும் கை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான முன்பதிவு முகாம் சிவகாசியில் ஜனவரி 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் ஊனமுற்றோர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றைக் கொண்டு வந்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தேவைப்பட |