DSP ordered Sivakasians to close the shops at 11 P.P. |
12-03-2011 சிவகாசியில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைக்கக் கூடாது - டி.எஸ்.பி சிவகாசி, மார்ச் 11: சிவகாசி பகுதியில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருக்கக் கூடாது என காவல் துணை கண்காணிப்பாளர் என்.பெருமாள் ராமானுஜம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தொகுதிக்குள் வெளிநபர்கள் நடமாடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு 11 மணிக்குமேல் கடைகள் திறந்திருந்தால் வீதிகளில் யார் நடமாடுகிறார்கள் எனக் கண்காணிப்பது சிரமம். எனவே தேர்தல் முடியும்வரை அனைத்துக் கடைகளையும் இரவு 11 மணிக்குள் மூடிவிட வேண்டும். சிவகாசி நகருக்குள் நுழையும் இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட உள்ளது. சிவகாசி-சாத்தூர் சாலை, நர்ணாபுரம் சாலை, சிவகாசி-திருத்தங்கல் சாலை, சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் போலீஸรดர் வாகனச் சோதனையில் ஈடுபடுவர். கார்களில |