Sivakasi Exnora - Anniversary Celebration 2011

12-03-2011
சிவகாசியில் எக்ஸ்னோரா ஆண்டு விழா

சிவகாசி, மார்ச் 11: சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சிவிக் எகேஸ்னோராவின் 12-வது ஆண்டு விழா நடைபெற்றது.

வி.எஸ்.கே.டி. மெட்ரிக். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அந்த அமைப்பின் தலைவர் பிரேமா பால்ராஜ் தலைமை வகித்தார். நளினி அண்ணாமலையான் முன்னிலை வகித்தார்.

செயலாளர் லதா அபிரூபன் ஆண்டறிக்கை வாசித்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் நாடகம், நடனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

சிறப்பாகச் செயல்படும் கல்லூரி எக்ஸ்னோராவாக அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, காளீஸ்வரி கல்லூரி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜேஸீஸ் மெட்ரிக். பள்ளியில் செயல்பட்டுவரும் எகேஸ்னோராவுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

News & Events