Blood Donation Camp 2011 - Ayya Nadar Janaki Ammal College |
17-03-2011 கல்லூரியில் ரத்த தான முகாம் சிவகாசி, மார்ச் 14: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சமூகநலப் பணிக் குழு, உலகப் பல்கலைக்கழக சேவை மையம், இன்னர்வீல் கிளப், பட்டாசு நகர் அரிமா சங்கம், சிவகாசி அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்லூரில் ரத்த தான முகாம் நடத்தின. இதற்கு கண் தான மாவட்டத் தலைவர் ஜெ.கணேஷ் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) வி.பாண்டியராஜன் முகாமைத் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் ஆர்.அய்யனார் தலைமையிலான மருத்துவக் குழு, மாணவர்களிடம் 160 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்றனர். நிகழ்ச்சியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ, சமூகநலப் பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.முத்தமிழ்செல்வன், உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.மாரியப்பன், இன்னர்வீல் கிளப் தலைவர் பபிதா தனசேகரன், பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ச |